பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது முடிகின்றது தெரியுமா?... லீக்கான சுவாரசிய தகவல்!

Report
1163Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர போட்டிகளுடன் சென்று கொண்டிருக்கும் வேளையில் தற்போது எப்பொழுது முடிவடைகின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினத்தில் ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சேரன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுவரை கஷ்டமான டாஸ்க் கொடுக்காமல் இருந்த பிக்பாஸ் கடந்த வாரம் கோல்டன் டிக்கெட் டாஸ்க் சற்று கடினமாக இருந்து வந்தது. இதில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 6 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இன்றுடன் 92 நாட்களை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், 6 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நிறைவடையும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய போகும் நாள் குறித்த நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. இந்த சீசன் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த சீசன் 105 வது நாளில் நிறைவடைய இருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியும் 105 தான் ஒளிபரப்பாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

loading...