பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா?

Report
2007Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேல்டன் டிக்கெட்டினை பெற்று முகேன் இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளார். இந்நிலையில் மீதம் இருக்கும் 5 போட்டியாளர்கள் கடுமையான போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தினைக் கூட்டுவதற்காக இரண்டாவது சீசனில் முதல் இடத்திற்கு வந்த ரித்விகாவும், 3வது இடத்தினைப் பெற்ற ஜனனியும் சிறப்பு விருந்தினராக உள்ளே செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசனை விட கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாஸ்கில் கவனம் செலுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து தான் விளையாடி வருகின்றனர். ஒருவேளை எப்படி விளையாடனும்னு கற்றுக்கொடுப்பதற்கு இரண்டாவது சீசன் போட்டியாளர்களை உள்ளே அனுப்புகின்றார்களோ?.

View this post on Instagram

❤️❤️❤️🔥

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

loading...