இவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா?

Report
2190Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், ஏழு போட்டியாளர்களில் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றுள்ளார்.

ஷெரின், கவின் காப்பாற்றப்பட்ட நிலையில் லொஸ்லியா, சேரன் இருவரையும் கமல் பிரியாவிடை கொடுத்துவிட்டு வெளியே வரும்படி கூறியுள்ளார்.

இதனால் இன்று இரண்டு எலிமினேஷனா என்ற கேள்வியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பாரத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும் என்று கூறப்படுகின்றது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் டைட்டிலை வென்றனர்.

முதல் இரண்டு சீசன்களில் கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்ற சினேகன், ஜனனி இருவரும் டைட்டிலை வெல்லவில்லை. எனவே, இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெரும் போட்டியாளர் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கோல்டன் டிக்கெட் மூலம் இறுதிப்போட்டிக்கு சென்ற முகேன் வெற்றி பெற்றால் இதுவரை நினைத்த எண்ணம் தற்போது மாற்றப்படும் என்றும் முகேன் டைட்டிலை வெல்வாரா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, இந்த சீசனில், முகென் வெற்றி பெற்றால் இதுவரை கோல்டன் டிக்கெட்டை வென்ற போட்டியாளர் பட்டத்தை வென்றது இல்லை என்ற விஷயத்தை உடைத்து பிக் பாஸ் சீசனில் ஒரு வரலாறாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் காணப்படுகின்றனர்.

loading...