விஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன?

Report
1784Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், ஏழு போட்டியாளர்களில் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றுள்ளார்.

ஷெரின், கவின் காப்பாற்றப்பட்ட நிலையில் லொஸ்லியா, சேரன் இருவரையும் கமல் பிரியாவிடை கொடுத்துவிட்டு வெளியே வரும்படி கூறியுள்ளார்.

இதனால் இன்று இரண்டு எலிமினேஷனா என்ற கேள்வியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே போட்டியாளர்களின் ஆர்மி கலக்கு கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த வேட்டையன் கதாபாத்திரமே.

பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை எலிமினேஷன் லிஸ்டில் இருந்து வரும் கவினை ரசிகர்கள் காப்பாற்றியது மட்டுமின்றி கொண்டாடியும் வந்தனர். அடிக்கடி கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். இந்த நிலையில் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்துள்ளது.

இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் #BigilAudioLaunchOn SunTv-என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கினர். SunTv ஹேஷ் டேக்கை #Weadmirekavin டேக் முந்தி முதல் இடத்தில் வந்தது மட்டுமின்றி, சிறிது நேரத்தில் இந்திய அளவில் 4-வது இடத்தினையும் பிடித்துள்ளது.

loading...