திருமணத்திற்கு முன் பின்!.. மனைவி சினேகாவை பற்றி மனம் திறந்து பேசிய பிரசன்னா..!

Report
610Shares

நடிகர் பிரசன்னா கடந்த 2012 ம் ஆண்டு சினேகாவை திருமணம் செய்து கொண்டு அழகான ஆண் குழந்தைக்கும் தந்தையானார். தற்போது பிரசன்னா, அருண் விஜய்யுடன் மாபியா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து, திருமணத்திற்கு முன்பும், பின்பும் எப்படி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதில், "எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை.... தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்லூரி படிப்பின் போதும் எப்போதும் சினிமா குறித்த நினைவுகளே அதிகமாக இருக்கும்.

என்னுடைய வாழ்க்கையை பொருத்தவரையில் திருமணத்திற்கு முன்பு... திருமணத்திற்கு பின்பு என பிரித்து பார்க்கலாம். சினேகாவை திருமணம் செய்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் நேர்மறையான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மனைவி சினேகாவை பற்றி பெருமை பேசி உள்ளார் பிரசன்னா.

loading...