குறும்படத்தில் அம்பலமான லொஸ்லியாவின் உண்மை முகம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Report
1556Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் நன்றாக கோல்டன் டாஸ்கை விளையாடி முகென் முதலிடத்தை பெற்று பைனல் செல்வதற்கான டிக்கெட்டையும் வென்றார்.

இந்நிலையில் சாண்டிக்கும், கவினுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை பஞ்சாயத்தாக எடுத்து கமல் பேசுகிறார். அதாவது" நீங்க டாஸ்கை டாஸ்க்கா பார்த்தீங்களா கவின் ? இல்ல அதையும் தாண்டி... என நக்கலாக கமல் கேட்க உடனே அந்த அரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. பின்னர் கவின் பரஸ்ட் முகினும், லொஸ்லியாவும் கூட லைட்டா இடிச்சுக்கிட்டாங்க...

ஆனால் சாண்டி லொஸ்லியாவுடன் இடிச்சு விழும் போது தான் இன்னும் கொஞ்சம் என்ன மீறி எமோஷ்னல் ஆகிட்டேன் என கூறி மழுப்பினர். உடனே கமல் குறுக்கிட்டு ஆனால் , தர்ஷன் கையில் அடிப்பட்டபோது அந்த எமோஷனல் வரவேயில்லையே? என கூறி நக்கலடித்தார். உடனே தர்ஷன் உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் கவினை லுக் விட்டு சிரித்தனர்.

அதன் பின்னரும் சற்று மழுப்பியே வந்த கவின் மற்றும் லொஸ்லியாவுக்கு, ஒரு குறும்படத்தையும் போட்டு காண்பித்தார் கமல், அதில் நண்பர்கள் விட்டு கொடுக்கும் குணம் விளையாட்டில் இருக்க கூடாது என்பதையும் உணர்த்தினார். இதைக்கண்ட நெட்டிசன்கள் இதைத்தான் அவன் வந்த நாளில் இருந்தே செய்து கொண்டிருக்கிறான் இதெல்லாம் புதுசா என கழுவி கழுவி ஊற்றியுள்ளனர்.