பிக்பாஸில் கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்றார் முகென்.. கமல் போட்டு காட்டிய குறும்படம்..!

Report
342Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை எட்டிய உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் கோல்டன் பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடினார்கள்.

ஆனால் மதிப்பெண்கள் அடிப்படையில் முகென் முதலிடத்தை பெற்றார். இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற சைக்கிளிங் டாஸ்கில் கடைசி வரை போராடி தர்ஷன் வெற்றி பெற்றார். ஆனால் முகென் 42 புள்ளிகள் அடிப்படையில் கோல்டன் டிக்கெட்டை வென்றார்.

கோல்டன் டிக்கெட் பைனல் செல்வதற்காக வழங்குவதற்கு கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். முகெனின் கண்னை கட்டிக்கொண்டு நிறுத்தி தனி மேடையாக அமைத்து கமல் முகெனுக்கு வாழ்த்துக்களை கூறி பாராட்டி வெற்றிப்பெற்றதற்கான மெடலையும், டிக்கெட்டையும் கொடுத்தார்.

அதன் பின்னர் டாஸ்கில் விளையாடி வெற்றிப்பெற்றதற்கான குறும்படத்தையும் போட்டி காண்பித்தார். முகெனுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதைக்கண்ட ரசிகர்களும், போட்டியாளர்களும் ஆரவாரம் செய்தனர்.

loading...