பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..!

Report
1504Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் கோல்டன் டிக்கெட்டை வாங்குவார், யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நாமினேஷனில் இந்த வாரம் கவின், லொஸ்லியா, ஷெரின், சேரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சேரன் சைக்கிள் ஓட்டிய டாஸ்கில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்ற செய்திகள் வலம் வந்தன. ஆனால் ஓட்டிங் லிஸ்டில் சேரன் இரண்டாவது இடத்தில் இருந்ததால் சேரன் இந்த வாரம் வெளியேறமாட்டார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, சேரன் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டிக்கெட்டை முகேன் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

loading...