பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
3238Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை யார் வெளியேறப்போகின்றார். இன்று யாருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில் காலையில் கூறியது போன்று முகேன் கோல்டன் டிக்கெட்டினை பெற்று நேரடியாக இறுதி்ப்போட்டிக்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தவாரத்தில் கவின், லொஸ்லியா, ஷெரின், சேரன் என நான்கு பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் கவின் வாக்குகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கின்றார். ஆனால் சேரன், ஷெரின் கடைசி இடத்தில் இருந்து வந்தனர். தற்போது கடந்த இரண்டு நாட்களாக லொஸ்லியாவின் செயல் ரசிகர்களை கடுப்பேற்றிய வண்ணம் இருந்துள்ளது.

சாண்டியுடனான சண்டை, மகள் என்று பார்க்கும் சேரனுக்கு முடியாத தருணத்தில் லொஸ்லியா அவரை கண்டுகொள்ளாமல் கவினுடன் கடலை போட்டுக்கொண்டது என்று பல காரணங்கள் லொஸ்லியாவின் மீது எரிச்சலைக் கொண்டு வந்துவிட்டது.

இதனால் இரண்டாவது இடத்திலிருந்த லொஸ்லியா தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் லொஸ்லியா, ஷெரின் இருவரையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஷெரின் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ? ஷெரின் அல்லது லொஸ்லியா இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் அல்லது தன்னால் உடல் முடியவில்லை என்று கூறி சேரன் வெளியேறியிருக்கலாம் என்ற எண்ணம் பார்வையாளர்களிடையே ஓடிக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு குழப்பத்திற்கான தீர்வு நாளைய நிகழ்ச்சியில் மிகத்தெளிவாக விளங்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

loading...