கோல்டன் டிக்கெட் கிடைத்தது யாருக்கு தெரியுமா?... அமைதியாக இருந்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report
1508Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் மூலம் கோல்டன் டிக்கெட்டைப் பெறுவதற்கு போட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை ஆறு டாஸ்க்குகள் முடிந்த நிலையில், இதில் முதலிடத்தில் இருப்பது முகேன் ஆவார். அவரைத்தொடர்ந்து சாண்டி, ஷெரின், முகேன், சேரன், லொஸ்லியா, கவின் என தரவரிசையில் இருந்து வருகின்றனர்.

முதல் நான்கு இடத்தில் இருப்பவர்களுக்கே போட்டி அதிகமாக இருக்கும் நிலையில் கோல்டன் டிக்கெட்டினை முகேன் பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மிதிவண்டி மிதிக்கும் போட்டி ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளது.

இந்த மிதிவண்டியில் அவரவர் புகைப்படம் இருப்பது மிகவும் அரிதே... அந்த மிதிவண்டியில் மற்ற போட்டியாளர்கள் முகமோ அல்லது அவர்கள் முகமோ இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யார் புகைப்படம் பொருத்தப்பட்ட மிதிவண்டி அதிகநேரம் மிதிக்கப்படுகிறது அவர் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில் நேற்று கவின் முதல் ஆளாக மிதி வண்டியை விட்டு இறங்கிய நிலையில் இரண்டாவதாக ஷெரின் இறங்கியுள்ளார்.

இதில் கவின் மிதித்த வண்டியில் முகேன் புகைப்படம் போடப்பட்டிருந்தால் அவருக்கு 1 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும் என்றும் தற்போது 41 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருக்கும் முகேன் 42 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுவிடுவார் என்றும் அவருக்கே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

loading...