ஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
1302Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டினை பெறுவதற்கு கடுமையாக போராடி வந்தாலும் அவரவர்களுக்கு பிரியமான போட்டியாளர்களை மற்ற போட்டியாளர்கள் சீண்டும் போதும் கடும் கோபத்திலே காணப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் சாண்டியிடம் லொஸ்லியா கவினுக்காக சண்டையிட்டார். அப்பொழுது தர்ஷன் சில விடயங்களைக் கூறினார். பலூன் டாஸ்க் மற்றும் தெர்மாகோல் டாஸ்க்கிலும் லொஸ்லியா கவின் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைக் கூறினார்.

இதற்கு லொஸ்லியா மறுப்பு தெரிவித்து தர்ஷனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உண்மையில் தர்ஷன் ஒரு விடயத்தினை பார்க்காமல் ஷெரினுக்காக வக்காளத்து வாங்கிக்கொண்டு சில தருணங்களில் பேசுவது ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷனுக்காக குறும்படத்தினை வெளியிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.