தர்ஷனை ஷெரினிடம் கொடுத்துவிட்டு நீ விலகிக்கொள்.. தர்ஷன் காதலியை மோசமாக திட்டும் ரசிகர்கள்..!

Report
445Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை மிகவும் விறுவிறுபாக சென்று கொண்டிருக்கிரது. இந்த வாரம் முழுவதும் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த டாஸ்கில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் நேரடியாக இறுதிவாரத்திற்கு செல்லலாம்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் வனிதாவுக்கு தர்ஷன் விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய வனிதா தர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் நீ அவனிடம் நெருக்கமாக பழகினாள் அதற்கு கள்ளத்தொடர்பு என்று தான் பெயர் என்று கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான ஷெரின் எனக்கு தர்ஷன் வெறும் நண்பர் மட்டும்தான் அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தர்ஷன் காதலியான சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுக்கு ஆதரவு கொடுக்கும்படி தினமும் பதிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், தர்ஷன் மற்றும் ஷெரின் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க அழுதுள்ளார் சனம் ஷெட்டி, அந்த வீடியோவில் என்னால் தர்ஷினின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் என்னால் அப்படி இருந்தால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி விடுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதைக்கண்ட ரசிகர் ஒருவர், தர்ஷன் பெயரை வைத்து நீ பிரபலம் தேடி கொள்ளாதே பிச்சைக்காரி, தர்ஷனை செரினிடம் விட்டுவிட்டு நீ ஒதுங்கிக்கொள் என்று கூறியுள்ளார்.

இதனால், கடுப்பான சனம் ஷெட்டி, கண்டிப்பாக கிடையாது, இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி வேண்டும் என்றால் கூகுள் செய்து கொள். நீ சொல்வதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. நீ பிச்சைக்காரி என்பதை தெளிவாக எழுத கற்றுக்கொள் என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

loading...