பிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்?.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Report
1462Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் இறுதிப்போட்டிக்கு செல்லும் டிக்கெட் பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்த ஆறு டாஸ்குகளில் வெற்று பெற போட்டியாளர்கள் அனைவருமே போராடி வருகின்றனர். இதில் முகென் முதல் இடத்திலும் அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா, கவின் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள். எனவே கடைசி மூன்று இடங்களில் இருப்பவர்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லாத நிலையில், முகென், சாண்டி, ஷெரின் ஆகியோருக்கு தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, பிக்பாஸ் உதவியோடு கவின் கோல்டன் டிக்கெட்டை வெல்வார் என்று ஒரு தகவல் பரவியுள்ளது. எப்படியென்றால், முகென் 38 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். கவின் 18 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.

கவின் ஏற்கனவே ஷெரின் மற்றும் சாண்டியின் தங்க முட்டைகளை உடைத்துள்ளார். எனவே ஒரு முட்டைக்கு 10 முதல் 15 புள்ளிகள் கொடுக்கப்பட்டால் கவின், முகெனை விட அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

loading...