இலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்! வைரலாகும் சர்ச்சைக்குரிய காட்சி

Report
4173Shares

80 நாட்களாக ஜாலியாக கதைப் பேசி திரிந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு இந்த வாரம் மிகக் கடுமையான வாரமாக இருக்கிறது.

பிசிக்கல் மற்றும் மெண்டல் டாஸ்க்குகளாக கொடுத்து, அனைவரையும் பெண்டு நிமிர்த்துகிறார் பிக் பாஸ்.

நேற்றைய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தெர்மாகோல் துகள்கள் அடங்கிய கோணிப்பையை மாட்டிக்கொண்டு ஒரு வட்டத்தில் ஓட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வட்டத்தில் யார் பின்னால் யார் ஓட வட்டத்தில் என்று முடிவு செய்ய போட்டியாளர்கள் அனைவரும் துண்டு சீட்டை எடுத்தனர். முதலில் முகென் சீட்டை எடுத்து தனது எண் 3 என்று அறிவித்தவுடன், பின்னால் இருந்த லொஸ்லியா, அப்போ நீ எனக்கு முன்னாள் ஓடுவியா என்று கேட்டார்.

இறுதியாக கவின் சீட்டை எடுக்கும் போது தனது சீட்டை லொஸ்லியாவிற்கு கொடுத்தார். அதன் பின்னர் லொஸ்லியா தனது எண் 7 என்று கேமரா முன் காட்டியுள்ளார்.

இதனை பிக் பாஸ் கவனிக்க வில்லையா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடுமையான விதிமுறைகளை வழங்கும் பிக் பாஸ் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார் என்று குறும்படம் போட்டு பார்வையாளர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....

loading...