பிக்பாஸ் மதுமிதா விவகாரம்.. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு பதிவானது..! சிக்கப்போகும் போட்டியாளர்கள் யார்..?

Report
589Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போட்டியாளர் மதுமிதா தற்கொலை முயற்சித்ததாக கூறி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

அதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள்

இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன் என்றும் கூறி இருந்தார்.

மதுமிதா விஷயத்தில் அன்று வீட்டில் இருந்த சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அனைவரும் சம்மந்தபட்டவர்கள் தான் என்று பல குற்றச்சாட்டுகள் வலுத்தது.

இந்நிலையில் மதுமிதா குற்றச்சாட்டுகள் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்பில் புகார் பதிவாகியுள்ளதாக. மனித உரிமை அமைப்பை சேர்ந்த விஜயலக்ஷ்மி தேவராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, மதுமிதா விஷயத்தில் விரைவில் அந்த 5 நபர்களிடம் மனித உரிமை அமைப்பு விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

loading...