நேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்? சிக்கிய ஆதாரம் இதோ!

Report
2325Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வதற்கு கோல்டன் டிக்கெட்டைப் பெறுவதற்காக போட்டிகள் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதுவரை ஆறு டாஸ்க் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினத்தில் நள்ளிரவில் தங்க முட்டை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கார்டன் ஏரியாவில் வைத்திருக்கும் அவரவரது தங்க முட்டையினை அவருக்கு தெரியாமல் உடைக்க வேண்டும். தங்களது தங்க முட்டையை கீழே தள்ளி உடைக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே டாஸ்க்.

இந்த போட்டியின் இறுதி முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று வெளியாக முதல் ப்ரொமோ ஏமாற்றத்தினையே கொடுத்தது. இன்று வேறொரு டாஸ்க்கினைக் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

இந்த தங்க முட்டை டாஸ்கில் போட்டியாளர்கள் கழிவறைக்கு கூட செல்லாமல் தங்களது முட்டையை பாதுகாத்து வந்தனர். இதில் சாண்டி மட்டும் கழிவறைக்குச் சென்றார். இதில் அவர் பாத்ரூமிற்கு சென்ற விதத்தினைக் குறித்து சேரன் சாண்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சாண்டி வேணும்னா நான் எப்படி போனேன்னு நீங்க வந்த பாருங்க என்று கூறி தலைகுனிய வைத்துள்ளார்.

இன்று வெளியான ப்ரொமோவில் நேற்றைய முட்டை டாஸ்கில் வெற்றி பெற்றது யார் என்று சிறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கவின் பின்புறம் இருக்கும் பலகையில், முதல் இடத்தில் முகேன் இருக்கின்றார். கடைசியில் இடத்தில் சாண்டி இருக்கின்றார். சாண்டி கடைசி இடத்தில் இருப்பதற்கு காரணம் ஷெரினின் முட்டையை உடைக்கச் சென்றதை ஷெரின் அவதானித்துவிட்டதால் சாண்டி வெளியேற்றப்பட்டார். இதனால் அவருக்கு கடைசி இடத்தினை பெற்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.

எனவே, இந்த லிஸ்டில் இருப்பது தான் நேற்றைய தங்க முட்டை டாஸ்கின் முடிவு என்பது உறுதியாகியுள்ளது என்று கூறப்படுகின்றது.

loading...