பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்? கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்

Report
1786Shares

பிக் பாஸ் கொடுக்கும் கடுமையான டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இது வரை இடம் பெற்ற போட்டியில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் பிக் பாஸ் கொடுக்கும் கஷ்டமான டாஸ்குகளை சமாளித்து விளையாடி வருகின்றனர்.

இவர்களோடு ஒப்பிடும் போது சேரன் வயதில் மூத்தவராக இருப்பதால் கஷ்டமான டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறார்.

ஒரு வேளை டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலானதால் சேரன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படியான நிலையில் போட்டியில் இருந்து சேரன் வெளியேறுகின்றார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை. ஒரு வேளை இது வதந்தியாகவும் இருக்கலாம். சேரன் இறுதி வரை போட்டியில் விளையாட வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

loading...