புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது? பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு

Report
2278Shares

நகைச்சுவை நடிகர் செந்தில் படவாய்ப்புகள் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார்.

இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர்.

ஆனால், 80 , 90 களில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை நடிகர்கள் என்றாலே அது நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் தான்.

இவர்களை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மிகவும் பிரபலம்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர்கள் தற்போது என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் புதிய தொடரில் நடிப்பதாக உத்தியோபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ஒரு புறம் அவர் நடிப்பதற்கான வாய்ப்பாக இருந்தாலும், புகழின் உச்சத்தில் இருந்த நடிகருக்கு இந்த நிலையா என்று ரசிகர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

loading...