கவின் லொஸ்லியா காதல்!... மாஸ் காட்டிய லொஸ்லியா தந்தை.. கஸ்தூரி என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Report
980Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் freeze டாஸ்க் வைக்கப்பட்டது. இந்த டாஸ்கில் பத்து வருடங்களாக மகளை பார்க்காமல் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த லொஸ்லியாவின் தந்தை வந்திருந்தார்.

அப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் மகள் லொஸ்லியாவை கடுமையாக திட்டினார். காரணம் கவினுடனான காதலுக்காக தான்.

இந்த சமயத்தில், கவின் வாயை திறக்காமல், பதற்றத்தில் அமைதியாய் நின்று கொண்டிருந்தார். லோஸ்லியாவை இந்த நிலைக்கு ஆளாக்கியது என் தப்பு தான் என்று கண்ணீர்விட்டு அழ தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியே வந்த கஸ்தூரி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், முதல் சீசனில் ஆரவ், ஹரிஸ்கல்யான், ஓவியா ஜோடியாக திகழ்ந்தனர். பிக்பாஸ் சீசன் 2 நான் பார்க்கவில்லை. தற்போது பிக்பாஸ் சீசன் 3ல் இவர்கள் அப்படி ஆகவேண்டும் என்று நினைத்து செய்கின்றனர்.

உண்மையான காதல் வேறு, கண்டெண்ட்காக செய்யும் காதல் வேறு என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த சீசனில், போட்டியாளர்கள் யாரும் ஹீரோவாக திகழவில்லை, போட்டியாளர்களின் உறவினர்கள் தான் அப்படி திகழ்ந்துள்ளனர்.

லொஸ்லியாவின் தந்தை, சூப்பர் தந்தையாகவும், கவினின் நண்பன் சிறந்த நண்பராகவும் பிரபலமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

loading...