வெற்றியாளராக ஈழத்து தர்ஷன்! சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்

Report
1494Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிஸிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைரக்ட் பினாலேவுக்கான டிக்கெட் வழங்குவதற்காக போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.

இன்று நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நீங்கள் பிக் பாஸ் வின்னராக இருந்தால் அந்த தருணத்தில் என்ன கூறுவீர்கள் என்பதை தனித் தனியாக கூற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தர்ஷன் பேசும் போது வேறு ஒரு நாட்டில் இருந்து வந்த என்னை வெற்றியாளராக தெரிவு செய்த மக்களுக்கு நன்றி. இந்த தருணம் என்பது அனுபவித்தால் தான் வரும் என்று கூறினார்.

இதேவேளை, உடனே பின்னால் இருந்த சேரன் “ நீ வேறு நாடு என்றாலும் என் இனம்... தமிழன்டா என்று கத்தினார்” அதனை கேட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெற்றி உணர்வை தர்ஷன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

loading...