14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..!

Report
360Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தை மட்டுமின்றி உலமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த இரண்டு சீசன்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது சீசனும் 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் தான் 12ம் வகுப்பு படிக்கும் போது 9ம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன் என்று கூறி அனைவரை அதிர்ச்சியடைய செய்துள்ளார். மேலும் கூறிய அவர் இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எனவும், தன்னை கவரவேண்டும் என்றால் நல்ல ப்ர்ஃப்யூம் அடித்திருக்க வேண்டும். அதோடு உயரமாக இருக்க வேண்டும் தாடி வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, திருமணம் செய்தால் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை தான் திருமணம் செய்வேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா படத்தில் தமிழில் வெளியான நோட்டா படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...