கோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்? முழுமதிப்பெண் பட்டியல் இதோ

Report
3757Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதிச்சுற்றிற்கு செல்வதற்கு கோல்டன் டிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நேற்றைய தினத்தில் தரவரிசைப் படுத்துதல், காலில் பலூன் கட்டி உடைத்தல் என்ற இரண்டு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது.

இதில் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்களுக்கும் 7 மதிப்பெண்களும், தனது பலூனை உடைக்காமல் வைத்திருப்பவர்களுக்கு 7 மதிப்பெண்ணும், மற்றவர் பலூனை உடைத்தால் ஒரு மதிப்பெண் என்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதல் மற்றும் கடைசி இடங்களில் யார் இருக்கின்றனர் என்பதை தெளிவாக தற்போது பார்க்கலாம்.

பலூன் டாஸ்கில் தர்ஷன் வெற்றி பெற்று 7 மதிப்பெண் பெற்றிருந்தார். சாண்டி -6, சேரன் – 5, லாஸ்லியா – 4, ஷெரின் – 3, முகென் – 2, கவின் – 1 என்ற வீதம் பெற்றிருந்தனர். கவின் முதல் ஆளாக தனது பலூனை உடைக்கவிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார்.

அடுத்து தரவரிசை டாஸ்க்கில் கடைசி இடத்தில் இருப்பவர்களுக்கு 1 மதிப்பெண்ணும், முதல் இடத்தில் இருப்பவர்களுக்கு 7 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டது.

இதிலும் தர்ஷன் முதல் இடத்தினைப் பிடித்தார். தர்ஷன் – 41, சாண்டி – 33,முகென்- 31, சேரன் -29, ஷெரின் -24, லாஸ்லியா – 21 கவின் – 14 என்று மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆக மொத்தம் இரண்டு டாஸ்க்கில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என்பதை கீழே காணலாம்.

தர்ஷன் – 41+7 = 48
சாண்டி – 33+6 = 39
சேரன் – 29+5 = 34
முகென் – 31 +2 = 33
ஷெரின் – 31 + 3 = 27
லாஸ்லியா – 21 + 4= 25
கவின் – 14+1= 15
loading...