பரபரப்பாகும் பிக் பாஸ்... வெளியேற போவது யார்? அனல் பறக்கும் முதல் நாள் வாக்குகள்

Report
1494Shares

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று வனிதா வெளியேறி விட்டார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் சேரன், கவின், தர்ஷன், சாண்டி, முகென், லொஸ்லியா மற்றும் ஷெரின் என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.

இறுதிகட்டத்தை நெருங்குவதால் இனி வரும் நாட்களில் போட்டியாளர்களிடையே போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைபெற்றது.

அந்த வகையில், சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கவின் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது ஒரு புறம் இருக்க வெளியே செல்ல போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், ரகசிய அறையில் வைத்து போன வாரம் சேரன் காப்பாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்த வாரம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனினும், முதல் நாள் ஓட்டிங்கில் ஷெரின் கடைசி இடத்தில் உள்ளார். ஒரு சில வேலை திடீர் திருப்பமாக அவர் கூட வெளியேற்றப்படலாம் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

View this post on Instagram

Who ??

A post shared by BiggBoss Unseen Vidzz Official (@biggboss_vidzz) on