சென்ற வாரம் கவின் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனை கோடிகளா..?

Report
997Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் தான் உள்ளனர்.

இதில், யார் வெற்றிபெறப் போவது என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த தினத்திலிருந்தே சர்ச்சைகளையே சந்தித்து வந்த கவின் அதிகளவில் நாமினேட் செய்யப்படும் ஒரு நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.

இருப்பினும், அவர் நாமினேட் செய்யப்படும் பொழுதெல்லாம், மக்கள் அவரி காப்பாற்றி வருகின்றனர். எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் எப்படி கவினுக்கு இவ்வளவு ஆதரவு என்பது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது.

இந்நிலையில், சென்ற வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் வாக்கு எண்ணிக்கைகள் குறித்து தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், கவினுக்கு மட்டும் 8.8 கோடி வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தர்ஷனுக்கு 8.6 கோடி வாக்குகளும், சாண்டிக்கு 7.9 கோடி வாக்குகளும் விழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஷெரீனுக்கு 6 கோடி வாக்குகள் பெற்றுள்ளார். வனிதா 5 கோடிக்கும் குறைவான வாக்குகள் பெற்று நேற்று வெளியேற்ற பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அதிக வாக்குகள் பெற்ற கவின் இந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

loading...