வெளியே வந்ததும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.. புதிய வீடியோ வெளியிட்ட மதுமிதா..!

Report

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுமிதா அன்று அதிகமாக உணர்ச்சி வசப்பட்டதால் தேவையற்று நிறைய விஷயங்களை பேசிவிட்டேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவை பெற்ற மதுமிதா, போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை முயற்சி செய்து கையை அறுத்துக்கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய மதுமிதா, "ரசிகர்கள் என்னை சமூகவலைதளங்களில் லைவ் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், நான் எந்த சமூகவலைதளப் பக்கத்திலும் தற்போது இல்லை.

பிக் பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி எனக்கு ஆதரவளித்த அனைவருக்குமே இந்த வீடியோ மூலமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றைக்கு செய்தியாளர் சந்திப்பில் நான் பேசிய விசயங்கள் அனைத்துமே உண்மை. ஆனால், அன்று சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அது ஏனென்றால், பொதுவாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்பவர்களுக்கு தீவிர மன உளைச்சல் ஏற்படுவது வழக்கம். எனக்கு நடந்த விசயங்களால் என் மன அழுத்தம் மேலும் அதிகமானது.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்தபிறகும் கூட சுமார் 20 நாட்களுக்கு அதன் தாக்கம் இருந்தது. வழக்குகள், நலம் விசாரிப்புகள் என ஏகப்பட்ட விசயங்கள் வெளியில் நடந்தது. அந்த சூழ்நிலையில் முதன்முறையாக மக்களைச் சந்தித்து பேசப்போகிறேன் என்றதும், என்னை அறியாமல் எனக்குள் இருந்த விசயங்கள் எல்லாம் வெளியில் வந்து விட்டது.

இப்போது நன்றாகவே குணமடைந்து வருகிறேன். மனதளவில் இன்னமும் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விரைவில் அதுவும் சரியாகி விடும் என நம்புகிறேன்.

படப்பிடிப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டேன். எனக்காக வருத்தப்பட்ட அனைவருக்கும் நன்றி" என இவ்வாறு அதில் மதுமிதா பேசியுள்ளார்.

loading...