கமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..!

Report
2138Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் 27 ஆம் திகதி தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இதே சமயத்தில், தான் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 3 யும் பல சர்ச்சைகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஏதோ பிக் பாஸ் நிறுவனம் கொடுக்கும் அறிவுரைகளின்படி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்று கமலை நெட்டிசன்கள் சரமாறியாக விமர்சித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கு சீசன் 3 யின் ப்ரோமோ ஒன்ப்று சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

அதில், தவறு செய்த போட்டியாளர்களை தொகுப்பாளர் நாகர்ஜுனா கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்.

இந்த ப்ரோமோவைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், தயவு செய்து கமல் எடுத்துவிட்டு, தமிழ் பிக்பாஸை ஒருவாரமாவது நாகர்ஜுனாவை தொகுத்து வழங்க சொல்லுங்கள் என்று பதிவுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

loading...