பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின் தங்கை..! என்ன பெயர் தெரியுமா?

Report
609Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிஷோடில் போட்டியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர்களது உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு குறித்து பேசிய கமல் மேலும் யாரவது வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என நினைக்கிறீர்களா என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் தங்கை மற்றும் மாமியார் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என காமெடியாக கூறினார்.

இதனை அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் அவர்களை மேடைக்கு அழைத்து பேசவைத்தார் கமல். சாண்டி மாஸ்டரின் மனைவியின் தங்கை போட்டியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில் வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் தாம் ஒரு பட்ட பெயர் வைத்திருப்பதாக கூறினார். தனக்கு தவளை என பட்ட பெயர் இருப்பதாகவும், லாஷ்லியா பார்ப்பதற்கு தன்னை போலவே இருப்பதால் அந்த பெயர் அவருக்குத்தான் என கூறி லாஷ்லியாவுக்கு தவளை என பெயர் வைத்தார்.

loading...