முகமூடி கிழிந்தது...! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
6827Shares

பிக் பாஸ் நிழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வனிதா வந்த பின்னரே நிழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நாளை வனிதா எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சினைகளுக்கு வனிதாதான் காரணமாக இருந்தார் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்தனர்.

இந்நிலையில் இன்றைக்கான எபிசோடும் ஒரு நாள் முன்னதாக நேற்றே ஷுட் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா எவிக்ட் செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

இந்த வாரம் தான் வனிதா அமைதியாகவும் மற்றவர்களுக்கு நல்ல மாதிரியான அட்வைஸ்களையும் கொடுத்து தனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காட்டினார்.

மக்கள் மத்தியில் வனிதா ஒரு சிறந்த போட்டியாளர் என்ற பெயர் வரும் போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தான் அவரின் உண்மையான குணம் என்பது பலருக்கு அவர் வெளியேறும் தருணத்தில் தெரிய வந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் கூட வனிதாவை கமலே பாராட்டியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இன்னும் நிகழ்ச்சி முடிய சில வாரங்களே இருக்கும் நிலையில் வனிதா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

loading...