காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
242Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.

இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாத்திக்கொண்டதுடன் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் தற்போது ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் நடித்து வரும் ஆர்ஜே மிர்சி செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இப்படி யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களே? என்ற வருத்தம் இருந்தாலும் புதுமணத்தம்பதியை ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் வாழ்த்தி வருகின்றனர்.

10591 total views