இந்தியளவில் டிரெண்டான நடிகர் கவின்... பிக்பாஸிலிருந்து வெளியேறுகிறாரா? அதிர்ச்சி தகவல்

Report
1598Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கவினுக்கு நிகழ்ந்த துயரம் கடந்த 78 நாட்களில் நடக்காத ஒன்றினை அனுபவித்து வந்துள்ளார்.

வெளியில் தாய் மற்றும் குடும்பம் சிறையில் காணப்படுகின்றனர். உள்ளே லொஸ்லியாவுடனான காதலால் சற்று மகிழ்ச்சியாய் காணப்பட்டார் கவின்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் லொஸ்லியாவின் தந்தை. இதனால் காதல்தோல்வியில் கவின் அழுதது ரசிகர்கள் கண்களே கலங்க வைத்துள்ளது.

கவின் இவ்வாறு அழுததைத் தொடர்ந்து, இணையத்தில் #Staystrongkavin என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த டிரெண்டுக்கு கவின் ரசிகர்கள் தான் காரணம். பலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருபுறம் உலகளவில் ட்ரெண்டாகி வந்தாலும் மறுபுறம் இந்த காதல் தோல்வியினாலும், நம்மால் லொஸ்லியாவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டதை நினைத்து வருந்திய கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி வருகின்றன. அதாவது நம்ம ஓவியா போல இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். சிலரோ கவினுக்கு வீட்டு பிரச்சினையும் தெரியவந்திருக்கும் என்று கூறிவருகின்றனர். எது எப்படியோ! இன்றுடன் 80வது நாளைக் கடந்து வரும் கவினுக்கு இன்னும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கமலிடம் ஏற்கெனவே கவின் கூறியிருந்தது போல அடிக்கு மேல அடி அதிகமாக வாங்கியது நான் தான் என்பது போல தற்போது வாங்கிக்கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் மிகவும் ஸ்டாராங்காகவே இருந்து வருகின்றார்.

55544 total views