லொஸ்லியா- கவின் காதலை எதிர்ப்பது ஏன்? பிரபல இயக்குனரின் காட்டமான பதிவு

Report
1823Shares

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

லொஸ்லியாவை கண்டித்த அவரது தந்தை மரியநேசனுக்கு ஆதரவாக பலர் பேசினாலும், எதிராகவும் சிலர் கருத்து கூறிவருகின்றனர்.

இதுகுறித்து பிரபல இயக்குனரான வசந்தபாலன் வெளியிட்டுள்ள பதிவில், கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்க்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதலாக இருந்தது.

ஆனால், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லொஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே "லொஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?...கேமை கவனித்து விளையாடுங்க" என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

"வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லொஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்ட வண்ணம் இருந்தார்கள். லொஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள். லொஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.

ஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகதான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?

காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

56899 total views