லொஸ்லியாவின் தந்தைக்கு குவியும் பாராட்டுகள்! யார் இவர்? கனடாவில் என்ன செய்கிறார்?

Report
4255Shares

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உலகளவில் தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ், இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இறுதி நாட்களை நெருங்கியுள்ளதால் Freeze Task வைக்கப்படுகிறது, நேற்று ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து லொஸ்லியாவின் தந்தையான மரியநேசன் வந்திருந்தார்.

10 ஆண்டுகள் கழித்து மகளை பார்த்த சந்தோஷம் இருந்தாலும், பிக்பாஸில் அவரது செயல்களால் மனம் நொந்து போயே காணப்பட்டார்.

உள்ளே வந்ததும் மகளை அவர் கண்டித்த விதம், சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

யார் இவர்?

இலங்கையின் கிளிநொச்சியில் மரியநேசன்- மேரி மாக்ரட்டின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி லொஸ்லியா பிறந்தார்.

யுத்த சூழ்நிலையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர்.

அங்கு அன்புவெளிப்புரம் பகுதியில் ஓலைகளானாலான வீடொன்றைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், மரியநேசன் அவர்கள் ஓட்டுநராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்க, 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் வாய்ப்பை தேடி கனடாவுக்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது சகோதரிகள் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்ற லொஸ்லியாவுக்கு, தமிழில் ஆர்வம் அதிகம்.

பல்வேறு போட்டிகளில் தன் திறமையை லொஸ்லியா வெளிப்படுத்த, பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊடக துறையை தெரிவு செய்த லொஸ்லியா, முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி, செய்தி வாசிப்பாளராகவும் தன்னை தரம் உயர்த்தி கொண்டார்.

இதன் பின்னர் இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக பிரபலமடைந்ததுடன் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

எனினும் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அறிவுரையால் லொஸ்லியாவின் செயல்பாடுகளை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்!!!!

172668 total views