உறவுகளையே அசிங்கப்படுத்துகின்றனர்! லொஸ்லியாவின் தந்தை குறித்து வைரலாகும் ட்டுவிட்!

Report
2277Shares

பிக் பாஸ் முதலாவது சீசனின் இரண்டாம் வெற்றியாளர் கவிஞர் சினேகன் சேரன் குறித்தும் லொஸ்லியாவின் தந்தை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அந்த தந்தையின் மன வருத்தம் எனக்கு தெரிகிறது. பார்ப்பதற்கு மிகவும் வேதனையளிக்கிறது.

சேரன் இதனை தான் இவ்வளவு நாளும் செய்தார். அப்போது அனைவருக்கும் சேரன் கெட்டவராக தெரிந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிக் பாஸில் நாங்கள் இருக்கும் போது, கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் மரியாதை குறைவாக யாரும் நடக்கவில்லை. அண்ணன் வையாபுரியை அனைவரும் அப்பா ஸ்தானத்தில் பார்த்தனர். சிலர் உறவுகளையே அசிங்கப்படுத்துகிறார்கள் எனவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

you may like this video


70873 total views