கவினை எச்சரித்த லொஸ்லியாவின் தந்தை... வேற என்னவெல்லாம் கூறினார் தெரியுமா?

Report
2715Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Freeze Task ஆரம்பித்துள்ளதால் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் பயங்கர எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.

நேற்றைய தினத்தில் வீட்டிற்குள் முகேனின் தாய் மற்றும் தங்கை உள்ளே வந்தனர். இன்று லொஸ்லியாவின் தந்தை கனடாவிலிருந்து லொஸ்லியாவைப் பார்ப்பதற்கு வந்துள்ளார்.

வந்ததும் அவர் லொஸ்லியாவினை பயங்கரமாக திட்டித் தீர்த்துள்ளார். அதுமட்டுமின்றி நீ கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என்று தானே இங்கு வந்தாய்... நீ நாடு விட்டு நாடு வந்து இப்படி என்னை தலைகுனிய வைக்கிறாய்... இவ்வாறு லொஸ்லியாவினைத் திட்டிய அவரது தந்தை பின்பு கவினுடன் சென்று எனது மகளை நான் கேம் விளையாடுவதற்காகவே அனுப்பியுள்ளேன்.

இது ரியாலிட்டி ஷோ... தேவையில்லாமல் எனது மகளை குழப்பாதீர்கள்... எனக்கு இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.. அவர்களது எதிர்காலத்தினையும் நான் காண வேண்டும்.... என்னுடைய மொத்த குடும்பத்தினரது வாழக்கையும் சீரழித்து விடாதீர்கள்...

நீங்க ஒழுங்கா கேம்மை மட்டும் விளையாட பாருங்கள்... சேரன் சார் கூறும் போது உங்க அப்பா வந்து கூறட்டும், குடும்பத்திலிருந்து யாராவது கூறட்டும் என்று கூறினீர்கள்... இப்பொழுது நானே கூறுகிறேன் இந்த விடயத்தினை இதோடு நிறுத்திக்கோங்க.. அதுதான் உங்களுக்கு நல்லது... இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை கொடுக்கமுடியும். அந்த மரியாதையை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்... என்று பேசியுள்ளாராம். உடனே சாண்டியும் சேரனும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இரவு இன்னும் என்ன பேசினார்கள் என்பதை முழுவதுமாக நிகழ்ச்சியில் அவதானிக்கலாம்.

loading...