பிரபல நடிகருக்கு மருத்துவமனையில் நிகழ்ந்த கொடுமை... இறப்பிற்கான காரணத்தை உடைத்த மனைவி!

Report
993Shares

பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம்வந்த ராஜசேகர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் நிகழ்ந்த கொடுமை ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம் அவரது சிகிச்சைக்கு பணமில்லாமல் இருந்ததால் மருத்துவமனை சிகிச்சையில் அலட்சியம் காட்டியதால் அவர் உயிரிழந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

இளமைப் பருவத்தில் மட்டுமின்றி வயதான நிலையிலும் கூட தனது சினிமாத்துறையில் தனது நடிப்பினை சரவணன் மீனாட்சி மூலம் அசத்தி வந்தார் என்றே கூறலாம்.

சில வாரங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற வந்த அவருக்கு மருத்துவமனை சில தினங்களாக சிகிச்சை அளிக்கவில்லையாம்.

ராஜசேகரின் இறப்பு குறித்து அவரின் இரண்டாவது மனைவி கூறுகையில், அவர் தானாக இறக்கவில்லை... எங்களிடம் பணம் இல்லை என்றதும் மருத்துவனையில் சிகிச்சையில் அலட்சியம் காட்டியது மட்டுமின்றி இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கவே இல்லை... பின்பு கடைசி நிமிடங்களில் சீரியல் இயக்குனர் விக்ரமாதித்தன் தான் பணத்தினைக் கட்டினார். அப்படி பணம் கட்டியும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பணம் கட்ட தாமதமானதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்று மனவேதனையுடன் கூறினார்.

அதுமட்டுமின்றி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற அவரின் கடைசி ஆசையைக் கூட எங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

38990 total views