ஆடை குறித்து பேசிய மதுமிதாவை.. பயங்கரமாக பதிலடி கொடுத்த அபிராமி.. என்ன சொன்னார் தெரியுமா?

Report
717Shares

பிக்பாஸ் நிகச்சியில் மதுமிதா இருந்த போது தமிழ் பெண் என்ற விஷயத்தில் இவருக்கும் அபிராமி, ஷெரின், சாக்‌ஷி, ஆகிய மூவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சில பிரச்சினைகளில் சிக்கி மதுமிதா போட்டியாளர்களின் கேலி, கிண்டல்களால் தற்கொலை முயற்சி செய்து வெளியேறினார். வெளியே வந்து சில நாட்கள் கழித்தபின் நேர்காணலில் பேட்டியளித்த மதுமிதா அபிராமியின் உள்ளே ஆடையே போடாம சுத்திட்டு இருக்காங்க, ஆனால் என்ன கவுன் போட்டு இருக்கேனு கேட்டாங்கனு கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

இந்நிலையில் முதன் முறையாக தன் மீது மதுமிதா சொன்ன விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அபிராமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் அதில், அவர்களுக்கு யாராவது நேர்கொண்ட பார்வை படத்தில் டிக்கெட்டை அனுப்புங்கள் எனது ஆடை குறித்து விமர்சித்த அவர்களுக்கு நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றை மட்டும் தான் உங்களை உயர்த்திக் காண்பிக்க மற்றவர்களை ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார் அபிராமி.

தனது ஆடை குறித்து விமர்சித்த மதுமிதாவிற்கு தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை அபிராமிபதிலாக அளித்துள்ளார். மேலும், இதன் மூலம் தான் என்ன அணிய வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்றும், ஆடையை வைத்து யாரும் ஒருவரின் குணத்தை மதிப்பிட வேண்டாம் என்றும் மறைமுகமாக கூறியுள்ளார் அபிராமி.

loading...