விலை உயர்ந்த வைரத்தை விழுங்கிய எலி! வயிற்றைக் கிழித்து எடுத்த வியாபாரி (குட்டி கதை)

Report
169Shares

மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். சில உறவுகளை பல சந்தரப்பங்களில் பிரிய நேரிடும்.

சில உறவுகளை காரணமே இல்லாமல் கூட பிரிந்து விடுகிறோம். ஆனால் உறவுகள் அவசியமான ஒன்று. அதற்கு இந்த குட்டி கதை எடுத்து காட்டு.

எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கி விட்டது.

மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை ''ஹூட்"" செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்து விட்டான் அதை ஹூட் செய்ய...

எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஒடியதில் திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடி விட்டன.

ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது.

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய் விட்டது.
சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்... எலி spot out
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்...

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..

ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே ! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டு விட்டாய்..என்ன காரணம் ?? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. இப்படி தான்..

பலபேர் திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல் தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய் விடுகிறது என்றான்.

உறவுகளும் அப்படி தான் சிலர் இடையில் வந்து அழிந்து போகும். செல்வதை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டு விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும் நல்ல நட்புமுமே கடைசி வரையில் கை கொடுக்கும்.
5256 total views