டேய் காக்கா... கமெராவுக்கு பின்னாடி கவினும், லொஸ்லியாவும்.. ட்விட்டரில் கேள்வி எழுப்பியவரை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..!

Report
1253Shares

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் வெளியேறியவர் நடிகை கஸ்தூரி.

இவர், ட்விட்டரில் படு பிஸியாக இருப்பவர், யார் என்ன சொன்னாலும், தவறாக பேசினாலும், அவரை மூக்கை உடைக்கும் அளவிற்கு பதில் அளிக்கக் கூடியவர்.

இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே, அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரச்சனைகள் அதிகளவு ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, கஸ்தூரி பொட்டிப் பாம்பாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய கஸ்தூரி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில், நெட்டிசன்களின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்து வரும் கஸ்தூரி தற்போது ஒரு நபர் கஸ்தூரியிடம் திட்டி ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

அதில், காக்கா கேமரா முன்னாடி லூசு மாதிரி ஆடு என திட்டியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, பாடினதே கவினையும், லொஸ்லியாவையும் பாத்து தாண்டா காக்கா, காமெராக்கு முன்னாடி பாட்டு என்னுது, ஆனா பின்னாடி விளையாட்டு அவுங்களுது என பதிலளித்துள்ளார்.

39570 total views
loading...