யார் இந்த தர்ஷன்! லொஸ்லியா காதலிப்பது இவரையா? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
2829Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அனைவருக்கும் ரசிகர் பெருமக்கள் ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மறுநாளே பலருக்கும் ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி என்ன தகவல் கிடைத்தாலும் அதனை வைரலாக்கி விடுகின்றனர்.

இந்த வகையில், பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று விளையாடி கொண்டிருக்கும் இலங்கை பெண் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கவினை காதலிக்கும் முன்னர் மக்களில் ஓட்டு லொஸ்லியாவுக்கு அதிகம் கிடைத்திருந்தது. தற்போது காதல் சர்ச்சையால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

கவின் லொஸ்லியா காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவின்லியா ஆர்மியும் உள்ளது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கக்கூஸ் கவின், கக்கூஸ்லியா ஆர்மியினரும் உள்ளனர்.

ஒவ்வொரு ஆர்மியினரும் அவர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை உண்டு இல்லை என செய்து வருகின்றனர். தங்களின் தலைவர்களை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் அவரவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள் ஆர்மியினர். இதனால் சமூக வலைதளங்களில் ஆர்மியினருக்குள் அடிதடி நடக்காத குறையாக சண்டை நடக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே லொஸ்லியாவுக்கு ஒரு காதலர் இருப்பதாக கூறப்பட்டது.

ஆரம்பத்தில் லொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. பின்னர் அது பொய் என்று கூறப்பட்டது.

தற்போதும் அதே போல், ஒரு பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில், லொஸ்லியா இலங்கையில் சக்தி சாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தர்ஷன் என்பவரை காதலித்ததாகவும், தற்போது கவினை பிக் பாஸ் வீட்டில் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர். தினமும் லொஸ்லியா குறித்து சர்ச்சையான கருத்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது எந்த அளவு உண்மை தன்மையானது என்பதையும் உறுதியாக கூறி விட முடியாது.

லொஸ்லியா இதற்கு விளக்கம் அளித்தால் மாத்திரமே சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும். நாடு கடந்து சென்றிருக்கும் லொஸ்லியா வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

loading...