குழந்தை பருவத்தில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் சேரன்.. யாரும் காணாத அறிய புகைப்படம்..!

Report
933Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த சேரன் பல வேலைகளை செய்து கொடுக்கும் டாஸ்கை அற்புதமாக செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் சமீபகாலமாக திரைத்துறையில் பல தோல்விகளையும் சந்தித்து வந்தார்.

இதனால் ஒரு மாற்றத்திற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார் சேரன். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்ற போட்டியாளர்களால் மரியாதை குறைவாக நடத்தப்பட்டபோது தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு இயக்குனர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர்.

தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மரியாதையை குறைத்துக்கொண்டு வருகிறார் என்றும் பலரும் புலம்பி வந்தனர். சேரன் ஆரம்ப காலத்தில் கே. எஸ் ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சேரன் அவரின் தாயுடன் இடுப்பில் குழந்தையாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

35325 total views