பிரிந்து வாழும் முகேனின் பெற்றோர்..! கோபத்துக்கு இதுதான் காரணமாம்

Report
1327Shares

பிக்பாஸ் சீசன் 3ல் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முக்கிய போட்டியாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் முகேன் ராவ்.

இவரின் தந்தையான பிரகாஷ் ராவ், சிறந்த பாடகராம், சிறுவயது முதலே தந்தையை பார்த்து வளர்ந்த முகேனுக்கு இசை என்றால் அலாதி பிரியம்.

9 வயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்கள் பாடிய முகேன், 13 வயது முதல் கவிதைகள் எழுதத் தொடங்கியுள்ளார்.

முகேன் பொலிசாக வேண்டும் என்பதே பிரகாஷின் விருப்பமாக இருக்க, அதை நிறைவேற்றியுள்ளார் அவரது இரண்டாவது மகன்.

தனது சொந்த முயற்சியில் பிரபலமான பின்னரே, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் தலைகாட்டியுள்ளாராம்.

சிறுவயதில் தான் அனுபவித்த கஷ்டங்கள், காதல் தோல்வியே அவரது கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவரது நண்பர்கள்.

அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய முகேன், கோபப்பட்டால் நிச்சயம் அதற்கு வலுவான காரணம் இருக்கும் எனவும் அடித்துச் சொல்கின்றனர்.

பல கஷ்டங்களை கடந்து இன்று நட்சத்திரமாக ஜொலிக்கும் முகேனின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர்.

சில மனவருத்தங்கள் காரணமாக மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறும் முகேன் தந்தை, விவாகரத்து செய்து கொள்ளவில்லை.

38130 total views