இதற்காக தான் இலங்கையிலிருந்து வந்தீங்களா லொஸ்லியா?

Report
4171Shares

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய முதல் நாளே லொஸ்லியாவுக்கு ஆர்மியும் ஆரம்பமானது.

அவரது க்யூட் ரியாக்ஷன், புன்னகை, கொஞ்சி பேசும் அழகால் ஆர்மியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததுடன் அவரை கொண்டாடவும் செய்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது செயல்பாடுகளால் ஹேட்டர்களும் உருவாகினர்.

கவினுடனான காதல் விவகாரம் லொஸ்லியாவுக்கு விழுந்த முதல் அடி, நெருக்கமாக அமர்ந்து கொண்டு பேசுவது, நள்ளிரவில் பேசுவது, மைக் ஆப் செய்துவிட்டு பேசுவது என இப்படி தொடர்ந்து கொண்டே செல்கிறது.

அவருக்கு வெளியில் ஆள் இருக்கிறார் என்று தெரிந்தும் லொஸ்லியா இவ்வாறு நடப்பதாக தகவல்களும் உலாவருகின்றன.

அடுத்ததாக அப்பா என்று கூறிக்கொண்டு சேரனுக்கு எதிராக நிற்பது, அடுக்கடுக்காக பொய்கள் என லொஸ்லியாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மற்றவர்கள் பிரச்சனை என்றால் மட்டும் வாய் திறக்கும் லொஸ்லியா, தான் செய்த தவறுக்கு மட்டும் மழுப்பல் பதில்கள் ஏன்? என்பதே பலரது கேள்வி.

அதிலும் சிலரோ இதற்காக தான் இலங்கையிலிருந்து வந்தீங்களா? என கமெண்டுகளையும் முன்வைக்கின்றனர்.

கமலும் கூட இது ஒன்றும் சுற்றுலா தளம் இல்லை என அனைவரையும் காட்டமாக கண்டித்தது நினைவிருக்கலாம்.

112937 total views