கஞ்சாவுக்கு அடிமையான இயக்குனர் பாக்யராஜ்! அவரே சொன்ன தகவல்

Report
740Shares

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கே. பாக்யராஜ், இன்றளவும் கூட இவரது படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் பாக்யராஜ், கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்ட கதை பற்றி பேசியிருக்கிறார்.

தமிழ் படமொன்றின் ஓடியோ விழாவில் பேசிய பாக்யராஜ், நான் நிறைய கஞ்சா அடிச்சிருக்கிறேன், கோயம்புத்தூர் குட்டப்பார்க்கில் அமர்ந்து அடித்திருக்கிறேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் என்னுடைய நாடகத்தில் நடிக்க விஸ்வம் என்பவரை ஒப்பந்தம் செய்திருந்தேன்.

கேரம் போர்டு விளையாடுவதற்காக அவர் ராமநாதபுரத்திலிருந்து கோயம்புத்தூர் வருவார், எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது, அவரது சிகரெட் வித்தியாசமாக இருந்ததால் என்னவென்று கேட்டேன்.

கஞ்சா தூளை ஒளித்துவைத்திருப்பதை சொன்னார், எனக்கும் புகைக்க கொடுத்தார், முதலில் பயந்த நான் புகைக்க தொடங்கினேன்.

நன்றாக இருந்ததால் அந்த பழக்கம் தொடர்ந்தது, ஒருநாள் எங்களை பார்த்து ஒருவன் சிரித்தான், அவன் சிரிப்பதை பார்த்து அடுத்தடுத்து மற்றவர்களும் சிரிப்போம், அப்போது தான் சிந்தித்தேன் நாம் போகும் பாதையை விட்டுவிட்டோம் என்று.

அத்தோடு சென்னை வந்துவிட்டேன், நான் இங்கு வந்த பின்னர் விஸ்வம் வந்தார், அவர் கையில் சிகரெட் இருப்பதை பார்த்து சொன்னேன், இதை விட்டதால் தான் நான் நல்லா இருக்கிறேன், நீயும் விட்டுவிட்டு என்று.

சிகரெட்டையும் நிறுத்தி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது என தெரிவித்துள்ளார்.

23549 total views