கண்ணீர் விட்டு கதறிய முகேன்! 19 வருட வாழ்க்கையை வாழாத தர்ஷன்! கடும் சோகத்தில் பார்வையாளர்கள்

Report
786Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.

அப்போது வாரம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் விவாதிப்பார்.

அந்த வகையில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் தனித் தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

முகனை அழைத்து பேசிய கமல், நீங்கள் முன்பு போல இப்போது இல்லை. நண்பர்கள் கூட்டத்தில் சேர்ந்தது முதல் முற்றிலும் போட்டி என்பதையே மறந்துவிட்டீர்கள் என்று கூறினார்.

அது மாத்திரம் அல்ல அதிகமாக எமோஷனல் ஆகிறீர்கள் அதை எல்லாம் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முகென், நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன். இது வெறும் கேம் தான் என்று விளையாடத்தான் வந்திருக்கிறோம் என்று பலமுறை தோன்றும்.

நான் தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். தர்ஷன் ஒரு முறை எண்ணிடம் பேசும் போது தான் 19 வருடங்கள் வாழ்க்கையையே வாழவில்லைஎன்று கூறியிருந்தான். அப்போது தான் நான் அவன் ஜெயித்தால் போதும் என்று நினைத்தேன் என்று கூறினார்.

இதேவேளை, இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷனின் ஆசிரியர் அவரை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். வாழ்க்கையில் பல விடயங்களில் போராடி இருக்கின்றார். உனக்கு தேவையான எல்லாவற்றையும் நான் கொடுத்திருக்கிறேன். நீ வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆசிரியரின் குரலை கேட்டதும் கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டார். இது பார்வையாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

27914 total views