அழகு தமிழில் வெளிநாட்டு பெண் செய்யும் செயல்! மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்

Report
186Shares

தனித்தன்மையான கலாசாரத்தைக் கொண்ட நாடு சீனா. பாரம்பரியம் மிக்க பல கலைகளின் பிறப்பிடமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நாட்டில் பிறந்து உலகமெல்லாம் பரவியிருக்கும் ஒரு நடனக் கலை முகமுடி மாற்றும் நடனம்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு முகமூடிகளை அணிந்து ஆடும் பழக்கம் சீனாவில் இருந்துவந்ததாகவும், அதுவே பின்னாளில் சிங்க நடனமாக மாறியதாகவும் கூறப்படுகிறது. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து சீனாவில் சிங்க நடனம் ஆடப்பட்டு வருவதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சிங்கம் சீனாவின் பிரபலமான விலங்கு இல்லை என்பதால், இந்த நடனம் இந்தியா போன்ற நாடுகளில் உருவாகி சீனாவுக்கு வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

இது குறித்த பல தகவல்களை வெளிநாட்டு யுவதி ஒருவர் அழகு தமிழில் பகிர்ந்து கொள்ளுகின்றார். பல திரைப்படங்களிலும் இந்த நடனக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

தற்காலத்தில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பல தேசங்களில் பிரிந்து கிடக்கும் சீனர்களை ஒருங்கிணைக்கும் கருவியாகும் இருக்கிறது இந்த நடனம்.

8057 total views