கமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்! வாயே திறக்காத கமல்

Report
1396Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் சேரனிடம் பேசியுள்ளார்.

உங்கள் சார்பாக அகம் டிவி வழியே அகத்திற்குள் என்கிற குரலை கேட்டதும் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடையது என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர் தனது சிஷ்யன் சேரனிடம் பேசியதை காட்டியுள்ளனர்.

சேரனிடம் மட்டும் பிக் பாஸ் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேரன் பெரிய இயக்குநர் என்பதால் அவரை வெற்றி பெற வைத்தால் அடுத்த சீசனுக்கு பெரிய திரையில் இருந்து மிகவும் பிரபலமானவர்களை அழைத்து வரலாம் என்று கணக்கு போட்டு பிக்பாஸ் செயல்படுவதாகவும் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி சேரன் உள்ளே இருப்பதால் தான் கஷ்டமான டாஸ்க்குகள் எதுவும் பிக்பாஸ் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினையும் வைத்து வருகின்றனர்.

இவ்வாறு ஒருபுறம் சிலர் கூறினாலும், சில ரசிகர்கள் நல்ல மனிதரை போய் அங்கு தங்க வைத்து பாடாய் படுத்துகிறார்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். தேவையில்லாத உறவும், அன்பும் உங்களை பாதிக்கும். அந்த லாஸ்லியாவிடம் இருந்து தள்ளியே இருங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

45446 total views