உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! ஆழ்கடலில் ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report
636Shares

கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகம் தின்னும் பாக்டீரியாக்களால் மிக விரைவாக அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

14 வருடங்களுக்கு முன்னால் அட்லாண்டிக் ஆழ்கடலுக்குச் சென்று, டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதே ஆழ்கடல் டைவர் குழு, மீண்டும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்துள்ளது.

இதன்போதே இந்த அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் ஐந்து முறை சோதனை செய்துள்ளது.

இந்த சோதனையின் போது டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலில் உள்ள அழுத்தத்தினாலும் டைட்டானிக் கப்பல் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

20721 total views