லொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல்! குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

Report
1081Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அனைவருக்கும் அவர்களின் ரசிகர் பெருமக்கள் ஆர்மி ஆரம்பித்து விடுகின்றனர்.

இன்று கவினுக்கும் லொஸ்லியாவுக்கும் கமல் குறும்படம் போட்டு காட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லொஸ்லியாவும் காதலில் மூழ்கியுள்ளனர். அவர்களின் காதல் எல்லை இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது.

அவர்கள் கொஞ்சி குலாவும் காட்சிகளே அதிகம் காட்டப்படுவதால் பிக்பாஸ் பார்க்கவே போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதில் லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைந்ததற்கான காரணம் இது தான் என்று கமல் சுட்டிக்காட்டினார்.

கவினும் லொஸ்லியாவும் நள்ளிரவில் சோபாவில் அமர்ந்து தனிமையில் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை. காரணம் அவர்கள் இருவரும் மைக்கை மியூட் செய்தும் மூடிவிட்டும் மற்றவர்களுக்கு கேட்காதபடி பேசுகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் மைக்கை மூடி விட்டோ மைக்கை கழட்டி வைத்து விட்டோ பேசக்கூடாது என்பது முக்கியமான விதி. ஆனால் அந்த விதியை மீறியுள்ளனர் இந்த காதல் ஜோடிகள். இதுவே லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மதிப்பெண் குறைந்ததற்கான காரணம்.

இது ஒரு விதிமீறல், விதிமீறல் செய்து விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை விளக்கவே இந்தப் படம் என ஒரு குறும்படத்தை ஒளிபரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த மொத்த பிக் பாஸ் வீடும் அதிர்ச்சியில் உறைந்து விட்டது.


46081 total views