அப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம்! கமல் என்ன செய்தார் தெரியுமா?

Report
854Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவருடனும் கமல் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசியுள்ளார்.

ஒரு பக்கம் காதல் வழுக்குது, இன்னோரு பக்கம் பாசம் வழுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுப்படுத்தியுள்ளார்.

சேரன் மகள் என்ற பார்வையில் லொஸ்லியா மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார் என்பது பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த சில வாரங்களாக லொஸ்லியா அவரின் பாசத்தை உதாசீனப்படுத்துவது போல நடந்து கொள்கின்றார்.

இந்த வாரத்தில் சேரனின் பெயரை நாமினேஷன் செய்திருந்தார். அது தெரிந்தும் தெரியாதது போல சேரன் இருந்து விட்டதாக கூறினார். ஆனால், அந்த குற்ற உணர்ச்சியில் லொஸ்லியா சேரனுடன் சாப்பிட கூட செல்ல வில்லை.

இதேவேளை, சேரன் ஆரம்பத்தில் லொஸ்லியா என்னை நாமினேட் செய்ய மாட்டார். அது உண்மை கிடையாது என்று நம்பினார். ஆனால் லொஸ்லியா சேரனின் நம்பிக்கையையும் பாசத்தினையும் உடைத்து விட்டார்.

இன்று இது குறித்து பேசிய கமல் இது ஒரு விளையாட்டு பாசத்தால் வந்த நோக்கம் திசை மாறுகின்றது என்று கூறி அவர்கள் பிரச்சினையை முடித்தார்.

ஆனால், அப்போது கூட சேரன் லொஸ்லியா பக்கம் நின்றுதான் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

32698 total views
loading...