பிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி! மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்?

Report
1169Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை யாரோ என மக்களால் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம் அவர்கள் நம்மோடு, நம்மைச் சுற்றி உள்ளவர்களின் குணாதிசயங்களோடு பல சமயங்களில் ஒத்துப் போவது தான்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் முகத்திரைகள் சமயங்களில் கிழிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் வெளியில் நல்ல இமேஜ் இருந்தாலும் உள்ளே கெட்ட பெயரை சம்பாதித்து விடுகிறார்கள்.

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிறைய பிரபலங்கள் பயப்படுவதுண்டு. அதனால் நிர்வாகமும் சர்ச்சைக்குப் பேர் போன, பிரபலமாக விரும்பும் புதுமுகங்கள் என கலவையாக போட்டியாளர்களைக் களமிறக்குகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சின் முதல் பாகத்தில் ஆராவ் முதல் இடத்தை பிடித்து 50 லட்ச ரூபாய் பரிசை அள்ளி சென்றார்.

இரண்டாவது சீசனில் ரித்விகா 50 லட்சம் பணமும் ஒரு சொகுசு வீட்டையும் பரிசாக தட்டிச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளருக்கும் வாரம் சம்பளம் மாத சம்பளம்,மொத்த சம்பளம் என்று பேசபட்டுள்ளது. போட்டியாளர்களின் பிரபலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்க்ஷி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் சம்பள விடயம் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பிக் பாஸ் முடிந்து 100 நாட்களுக்கு பின்னரே சம்பளம் வழங்கப்படும் என்று அவருக்கு பிரபல தொலைகாட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாம்.

மதுமிதாவின் சம்பள சர்ச்சைகள் தேவையில்லாத ஒன்று என்று கூறியுள்ளார். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஊடகமே மதுமிதா மீது வழக்கு பதிவு செய்ததாக அவர் அண்மையில் ஊடக சந்திப்பு நடத்தி கூறியிருந்தார்.

எனவே இந்த சம்பள பிரச்சினைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஊடகம் தான் பதில் வழங்க வேண்டும். அப்போது தான் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

loading...